மகா கும்பமேளாவில் கிரிக்கெட் விளையாடிய அகோரிகள் - வைரல் வீடியோ!
மகா கும்பமேளா நிகழ்வில் அகோரிகள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகா கும்பமேளா
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு மகா கும்பமேளா ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும்.
இந்த பிரம்மாண்ட திருவிழாவில் முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் , சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல கோடி பக்தர்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் புனித நீராடி வருகின்றனர்.
வைரல் வீடியோ
இந்த நிகழ்வுகள் பல்வேறு கவனம் ஈர்த்து வருகிறது.அந்த வகையில் மகா கும்பமேளா நிகழ்வில் அகோரிகள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ள அகோரிகளில் சிலர் உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுகின்றனர்.அப்போது ஒரு அகோரி பவுலிங்கில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.