ஒலிக்கும் மரண ஓலம்; 30க்கும் மேற்பட்டோர் பலி - கும்பமேளா கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது?
கும்பமேளா கூட்ட நெரிசலில் பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
கூட்ட நெரிசல்
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் ஜன.13ம் தேதி முதல் மகா கும்பமேளா விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர்.

இந்நிலையில் மவுனி அமாவாசையான இன்று (ஜன.29) கும்பமேளாவில் அதிகாலை கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், அங்கு திடீர் பரபரப்பு நிலவியது. கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உடனே மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
30 பேர் பலி
தொடர் விசாரணையில் பக்தர்கள் பாதுகாப்பிற்குத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தாண்டி குதிக்க முயன்றபோது நெரிசல் ஏற்பட்டது. புனித நீராடச் செல்லும் பாதைகள் மூடப்பட்டு இருந்ததாகவும் இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ராகுவின் நட்சத்திர மாற்றம்: 2027 ஏப்ரல் வரை இந்த ராசிகளின் நிதி முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது! Manithan
ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள் IBC Tamil
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல் IBC Tamil