மருத்துவமனையில் ரீல்ஸ் பார்த்த டாக்டர்; மூதாட்டி மரணம் - ஷாக் வீடியோ!

Uttar Pradesh Death
By Sumathi Jan 29, 2025 02:30 PM GMT
Report

நோயாளியை கவனிக்காமல் டாக்டர் ரீல்ஸ் பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

மருத்துவர் அலட்சியம் 

உத்தர பிரதேசத்தில் மெயின்புரி மாவட்ட மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பிரவேஷ் குமாரி(60) என்ற மூதாட்டி மாரடைப்பு ஏற்பட்டதாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

uttar pradesh hospital

ஆனால் அடுத்த 15 நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். அப்போது பணியில் இருந்து மருத்துவர் ஆதர்ஷ் சங்கர், நோயாளியை கவனிக்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்த்து கொண்டிருந்துள்ளார்.

கூட்ட நெரிசலில் 15 பேர் பலி; திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் - முதல்வர் அறிவிப்பு!

கூட்ட நெரிசலில் 15 பேர் பலி; திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் - முதல்வர் அறிவிப்பு!

அதிர்ச்சி வீடியோ

மேலும், நோயாளியை கவனிக்க செவிலியரை அனுப்பியதாக மூதாட்டியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து நோயாளியின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மூதாட்டியின் மகன் குரு ஷரன் சிங் என்பவர் கூச்சலிட்டுள்ளார். இதனால் மருத்துவர் அவரை அறைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து போலீஸார் மருத்துவமனைக்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இதுகுறித்து பேசியுள்ள மருத்துவமனை தலைமை மருத்துவர் மதன் லால், “ இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மருத்துவர் சங்கர் கவனக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.