ஜன்னல்கள் இல்லாத அறை, இரும்புப் படுக்கை.. எல்- சால்வடோர் கொடூர தண்டனை -ஆனந்த் மஹிந்திரா ஷாக்!

United States of America India Anand Mahindra
By Vidhya Senthil Feb 08, 2025 09:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் குறித்து இந்தியத் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.

  இந்தியர்கள்

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், சட்டவிரோதமாகக் குடியேறிய மக்களை நாடு கடத்துவது, உலக நாடுகளுக்கு வழங்கிய நிதி உதவியை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

ஜன்னல்கள் இல்லாத அறை, இரும்புப் படுக்கை.. எல்- சால்வடோர் கொடூர தண்டனை -ஆனந்த் மஹிந்திரா ஷாக்! | Anand Mahindra On El Salvador Trump Agreement

அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே , அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, எல் சால்வடோர் அதிபர் நயீப் புக்கேல்வை சந்தித்து பேசினார் .

டிரம்ப்பின் உத்தரவுக்கு வந்த சிக்கல் - மகிழ்ச்சியில் இந்தியர்கள்

டிரம்ப்பின் உத்தரவுக்கு வந்த சிக்கல் - மகிழ்ச்சியில் இந்தியர்கள்

அப்போது அமெரிக்காவில் உள்ள எந்தவொரு சட்டவிரோத வெளிநாட்டினரையும் தாங்கள் ஏற்றுக்கொள்ள தயராக உள்ளதாகத் தெரிவித்தார்.மேலும் சட்டவிரோத வெளிநாட்டினர்கள் எல் சால்வடோர்வில் உள்ள கைதிகள் ஜன்னல்கள் இல்லாத அறைகளில் அடைக்கப்படுவர்.

ஆனந்த் மகேந்திரா 

மெத்தை இல்லாமல் இரும்புப் படுக்கைகளில்தான் தூங்க வேண்டும்.உறவினர்கள், நண்பர்கள் என யார் வந்து பார்ப்பதற்கும் தடை விதிக்கப்படும். அவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இந்தியத் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கேல் எக்ஸ் தள்ப்பதிவை பகிர்ந்துள்ளார்.இது ஒரு மோசமான சம்பவம் இந்தியா இதுபோன்ற வாய்ப்பை அமெரிக்காவுக்கு வழங்காது என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.