முக்கியத்துவம் இல்லை.. பாஜகவை விட்டு விலகும் நடிகை - காங்கிரஸில் இணைகிறார்?
நடிகை பாஜகவில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் அணி செயலாளர்
தென்னிந்தியாவின் நடிகையான விஜயசாந்தி, 1998-ல் பாஜகவில் இணைந்து மகளிர் அணி செயலாளராக இருந்தார். இவர் 1999ல் லோக்சபா தேர்தலில் விஜயசாந்தி போட்டியிட்டார், பின்னர் இவர் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக அதிமுகவுக்கும் பிரசாரம் செய்தார்.
அதனப்பிறகு தெலுங்கானா முழக்கத்தை முன்வைத்து தனிக்கட்சி தொடங்கினார். பிறகு அப்போதைய டிஆர் எஸ் இப்போதைய பிஆர்எஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸில் இணைப்பு
இந்நிலையில், அக்கட்சியின் மேதக் தொகுதி எம்.பியாகவும் 2009-ல் வென்றார், 2014-ல் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
தற்போது தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் விஜயசாந்திக்கு பாஜக மேலிடம் முக்கியத்துவம் தரவில்லை என்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய முடிவெடுத்துள்ளதாக தெலுங்கானா தகவல்கள் வெளியாகியுள்ளது.