கொளுந்தனுடன் தகாத உறவு.. ஷாப்பிங் முடித்துவிட்டு ஓட்டம்பிடித்த மனைவி - கதறும் கணவர்!
இளம்பெண் கொளுந்தனாருடன் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளத்தொடர்பு
உத்தரப்பிரதேச மாநிலம், சிசோலா கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அமஹேதா அதிபூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியாவை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு விசு என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் தனியாக வசித்து வரும் நிலையில் அசோக்கின் வீட்டிற்கு அவரது தம்பியான ராகுல் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அப்பொழுது இவருக்கும் பிரியாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்து அந்த பெண்ணின் கணவர் இவரை கண்டித்துள்ளார்.
மனைவி செய்த காரியம்
இந்நிலையில், கர்வா சௌத் என்ற நோம்பிற்காக பொருட்கள் தேவை என தனது கணவர் அசோக்குமாரிடம் பிரியா கேட்டுள்ளார். இவர்கள் இருவரும் ஷாப்பிங் சென்றுவிட்டு பொருட்களை வாங்கியதும் அவரது கணவர் பிரியாவை வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் இரவு வீடு திரும்பியுள்ளார், அப்பொழுது வீட்டில் அவரது மனைவி மகனை காணவில்லை.
மேலும், அவரது வீட்டில் இருந்த தங்க, வெள்ளி நகை, பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பிரியா தலைமறைவாகியது தெரியவந்தது. இது குறித்து போலீசிடம் புகார் அளித்தார், அதில், "எனது வீட்டிற்கு ராகுல் அடிக்கடி வந்து போகும் போது அவருக்கும் என் மனைவி பிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதைக் கண்டித்ததுடன் ராகுலை வீட்டிற்கு வரக்கூடாது என்று கண்டித்தேன். இந்த நிலையில், அவர் என் மனைவி, மகனை நகைகளுடன் ராகுல் கடத்திச் சென்று விட்டார். அவர்களைக் கண்டுபிடித்து தரவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.