இயற்கைக்கு மாறான உறவில் கணவன்; அத்துமீறிய மாமனார் - இளம்பெண் கதறல்!
வரதட்சணை வாங்கி வர மறுத்த மனைவியிடம் கணவர் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.
வரதட்சணை
உத்தரபிரதேம் கோஞ்ச் ஜலான் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவரது பெற்றோர் திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாருக்கு தங்கம், வெள்ளி, பொருட்கள் உட்பட 15 லட்ச ரூபாய் வரதட்சணையாக தந்துள்ளனர்.
ஆனாலும், கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வேண்டும் என்று மாப்பிள்ளை, மனைவி வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், ஒரு கார் வேண்டுமெனவும் கேட்டுள்ளார். தொடர்ந்து பெண்ணின் மாமியாரும் கொடுமைப்படுத்தியுள்ளார்.
அத்துமீறிய கணவன்
பாதிக்கப்பட்ட பெண் இந்த கோரிக்கைகளுக்கெல்லாம் மறுத்துள்ளார். இதற்கு மனைவியை சம்மதிக்க வைப்பதற்காக அவருடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் கணவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பெண் கொடுமை தாங்காமல் போலீஸில் இதுகுறித்து புகாரளித்துள்ளார்.
அதில், மாமனார் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாகவும் கூறியுள்ளார். பெண்ணின் பெற்றோர், மருமகனுக்கு பலமுறை அறிவுரை சொல்லியும், கேட்காமல் மனைவியை தாக்கியுள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.