17 வயது சிறுவனுடன் தகாத உறவில் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி - தவித்த குழந்தைகள்!
17 வயது சிறுவனுடன் இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
ஓசூர், பெரிய மேனகரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி எல்லப்பா. இவரது 17 வயது மகன் விவசாய தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த சிறுவனுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி என்பவரது மனைவி அர்ச்சனா (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்து கொண்ட அர்ச்சனா கணவர் மற்றும் பிள்ளைகளை விட்டு விட்டு, சிறுவனோடு பெங்களூர் சென்றுள்ளார்.
தவித்த குழந்தைகள்
அங்குள்ள போதனஹள்ளி என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து மனைவி அர்ச்சனாவை, கணவர் பல இடங்களில் தேடியுள்ளார். தொடர்ந்து அவர்களது இருப்பிடம் அறிந்த உறவினர்கள் அந்தப் பெண்ணை மீட்டு சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதில் பலத்த காயமடைந்த சிறுவனை அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவனை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil