நாக சைதன்யா மீது அலாதியான காதல் - ஆசையாய் குத்திய டாட்டூவை அழித்த சமந்தா!
சமந்தா தன்னுடைய விலா எலும்பு பகுதியில் போட்டிருந்த டாட்டூவை அழித்துள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபத்தில் உடல்நிலை காரணமாக பெரிதாக அவதிப்பட்டு வந்தார்.

இதற்கிடையில், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த சமந்தா குஷி மூலம் கம் பேக் கொடுத்தார். அந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. தொடர்ந்து சீட்டாடென் வெப் தொடரையும் நடித்து முடித்துள்ளார்.
டாட்டூ நீக்கம்
தற்போது சினிமாவில் இருந்து விலகி 1 வருடம் உடல்நிலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதாக கூறியுள்ளார். மேலும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டது. முன்னதாக நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அப்போது, சமந்தா நாக சைதன்யா மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக தன்னுடைய விலா எலும்பு பகுதியில் chay என டாட்டூ குத்தி இருந்தார்.
பிரிந்து அதனை நீக்காமல் தான் வைத்திருந்தார். ஆனால், தற்போது, அந்த டாட்டூவை உடலில் இருந்து நீக்கி உள்ளார். அது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் மூலம் உறுதியாகியுள்ளது.
உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா IBC Tamil
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil