நான் அந்த மாதிரி ஆளு.. இப்போதான் அதுக்கு ஒருத்தர் கெடச்சுருக்கார் - வரலக்ஷ்மி ஓபன் டாக்!
தான் மிகவும் ரொமான்டிக்கான ஒரு பெண் என்று நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
வரலக்ஷ்மி சரத்குமார்
போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடனம், நடிப்பு என அதகளம் செய்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், கடைசியாக மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார்.

தற்போது 38 வயதாகும் வரலக்ஷ்மி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். சமீபத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் நடக்கும் முன்னதாகவே நிக்கோலாயும், வரலட்சுமியும் தாய்லாந்துக்கு டூர் சென்றிருக்கின்றனர்.
ரொமாண்டிக்
சமீபத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட வரலக்ஷ்மி "என்னை பார்த்து ரூடான பெண் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி கிடையாது. நான் ரொம்ப ரொமான்டிக்கான ஆளு.

அதை வெளிப்படுத்த இதுவரை எனக்கு சரியான நபர் வந்தது இல்லை. இப்போது தான் அதை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் மட்டும் இல்லை ஒவ்வொரு பெண்ணும் ரொமான்டிக்கானவர்கள் தான். அவருக்கு கிடைக்கும் பாட்னரை பொருத்து அது வெளிப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
பொட்டம்மானின் புலனாய்வு பிரிவை உசுப்பியதும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டதுமான விசேட நகர்வு... IBC Tamil
ரணிலின் ஆட்சியில் மாயமான 715 மில்லியன் டொலர்கள்! கடத்தல் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு IBC Tamil