வடிவேலுவை ஸ்பாட்ல உதைச்சேன்; 1000 ரூபாய் கூட குடுக்கல - போட்டுடைத்த சுமதி!

Tamil Cinema Vadivelu Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 01, 2024 01:07 PM GMT
Report

நடிகர் வடிவேலு குறித்து அவருடன் பல படங்களில் நடித்த நடிகை சுமதி பேசியுள்ளார்.

நடிகர் வடிவேலு

வைகைப்புயல் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகர் வடிவேலு, காமெடியனாக மட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

வடிவேலுவை ஸ்பாட்ல உதைச்சேன்; 1000 ரூபாய் கூட குடுக்கல - போட்டுடைத்த சுமதி! | Actress Sumathi Talks About Actor Vadivelu

தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களில் நடித்தார். மாமன்னன் படத்தில் இவரின் மாறுபட்ட சிறப்பான நடிப்பு பலரையும் கவர்ந்தது. ஆனால் சமீப காலங்களில் அவருடன் நடித்த துணை நடிகர்களின் நேர்காணல்களால், வடிவேலு பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

அந்தவகையில் அவருடன் பல படங்களில் நடித்த நடிகை சுமதி கூறுகையில் " கண்ணும் கண்ணும் படத்தில் வடிவேலுவை உதைக்கிற மாதிரி ஒரு சீன். நான் அத பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். முதலில் லைட்டா தான் டச் பண்ணேன்.

அஜித் நம்பர் 1 திருடன்.. என்ன வச்சு படம் எடுங்கன்னு கெஞ்சுனாரு - விளாசிய பிரபலம்!

அஜித் நம்பர் 1 திருடன்.. என்ன வச்சு படம் எடுங்கன்னு கெஞ்சுனாரு - விளாசிய பிரபலம்!

1000 ரூபாய்

அப்போ வடிவேலு "அப்படிலாம் இருக்கக் கூடாது சுமதி. நீ நல்லா டக்குனு உதைக்கணும். அப்போதான் சீன நிக்கும்" அப்படீன்னு சொன்னாரு. சரிங்க சார்'னு சொல்லிட்டு அப்பறம் பண்ணேன். அந்த உதைக்கு பிறகு வடிவேலு, வேகமா அடிச்சிட்டா.. வேகமா அடிச்சிட்டான்னு சொன்னாரு.

வடிவேலுவை ஸ்பாட்ல உதைச்சேன்; 1000 ரூபாய் கூட குடுக்கல - போட்டுடைத்த சுமதி! | Actress Sumathi Talks About Actor Vadivelu

சார் நீங்க தானே பண்ண சொன்னீங்க.. சாரி சார்'னு சொன்னேன். அதுக்கு வடிவேலு, இல்ல இல்ல நல்லா இருந்ததுனு சொன்னாரு. மேலும், வடிவேலு குறித்து பேசிய சுமதி "வடிவேலு கூட நடிச்ச ஒரு படத்துல கூட நான் 1000 ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்கல.

அப்போ ஏஜெண்ட்லாம் கூட்டிட்டு போவாங்க. இவங்க வாங்கிட்டு குடுக்குறாங்களா அதெல்லாம் எனக்கு தெரியாது. அப்பறம் நெறைய வடிவேலு சார் சொல்லியும் நான் போயிடுக்கின். அப்போ கம்பனில உனக்கு இவ்வளவு தான் அப்படின்னு 1000 ரூபாய் குடுப்பாங்க" என்று தெரிவித்துள்ளார்.