ஆஹா ஏழரை.. யோகிபாபு நடிப்பு இப்படித்தான் இருக்கு - நடிகர் வடிவேலு பளீச்!

Tamil Cinema Vadivelu Actors Tamil Actors Tamil Actress
By Jiyath May 29, 2024 02:21 PM GMT
Report

நடிகர்கள் யோகிபாபு மற்றும் சூரியின் நடிப்பு குறித்து நடிகர் வடிவேலு பேசியுள்ளார். 

நடிகர் வடிவேலு

வைகைப்புயல் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகர் வடிவேலு, காமெடியனாக மட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். 

ஆஹா ஏழரை.. யோகிபாபு நடிப்பு இப்படித்தான் இருக்கு - நடிகர் வடிவேலு பளீச்! | Actor Vadivelu About Yogi Babu Soori Acting

சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களில் நடித்தார். மாமன்னன் படத்தில் இவரின் மாறுபட்ட சிறப்பான நடிப்பு பலரையும் கவர்ந்தது. 

இன்னும் மறக்கல.. அப்பா அதுக்காக அப்படியே மாறிட்டாரு - நடிகர் ராமராஜன் மகள் பேட்டி!

இன்னும் மறக்கல.. அப்பா அதுக்காக அப்படியே மாறிட்டாரு - நடிகர் ராமராஜன் மகள் பேட்டி!

யோகிபாபு நடிப்பு?

நடிகர் வடிவேலு கலந்து கொண்ட ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் "உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வடிவேலு "சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன் எல்லாரையும் பிடிக்கும் என்றார். 

ஆஹா ஏழரை.. யோகிபாபு நடிப்பு இப்படித்தான் இருக்கு - நடிகர் வடிவேலு பளீச்! | Actor Vadivelu About Yogi Babu Soori Acting

உடனே செய்தியாளர் ஒருவர் "அப்போ யோகிபாபு, சூரி இவங்க எல்லாம் நல்லா நடிக்கலன்னு சொல்றீங்களா? என்று கேள்வி எழுப்பினார்.அப்போது பேசிய வடிவேலு "ஆஹா.. ஒரு பார்ட்டி ஏழரை இழுக்குறதுக்குன்னே வந்துருக்கு இங்க. அவங்க நடிப்பெல்லாம் நல்லா இருக்கு" என்று பதிலளித்தார்.