அஜித் நம்பர் 1 திருடன்.. என்ன வச்சு படம் எடுங்கன்னு கெஞ்சுனாரு - விளாசிய பிரபலம்!
தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் நடிகர் அஜித்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், நடிகர் அஜித்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது "விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் அஜித்திற்கு கிடையாது. அஜித்திற்கு நிச்சயமாக ஓப்பனிங் இருக்கிறது.
ஆனால் விஜய்க்கு கிடைக்கும் நீண்ட தூர வசூல் வேட்டை அஜித்திற்கு கிடைக்கவில்லை. அவர் படங்களில் துப்பாக்கியை மட்டும் வைத்து சுட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அஜித்தை யாரும் அவர்களாகவே அழைத்து படம் எடுக்கமாட்டார்கள். இவராகத்தான் சென்று படத்தை கமிட் செய்வார்.
மாற்றி விட்டார்
அஜித்தை விரும்பி செல்பவர்கள் குறைவு. அஜித்தை வைத்து போனி கபூர், சத்யஜோதி பிலிமிஸ் தவிர வேறு யார் தயாரிப்பார்கள். ரத்னத்தை அவர் சாய்பாபா கோயிலுக்கு சென்று சந்தித்து என்னை வைத்து படம் எடுங்கள் என்று கெஞ்சியதாக சொல்லப்படுகிறது.

அவர்களும் இவ்வளவு பெரிய ஸ்டார், இவ்வளவு கீழ் இறங்கி வந்து கேட்கும் பொழுது படம் எடுக்க ஒத்துக் கொள்கிறார்கள். எல்லோரும் ஒரு நடிகனை ரோட்டில் பார்த்தால் அவரது கிளாமருக்கு மயங்குகிறார்கள் அல்லவா? அதேபோலத்தான் தயாரிப்பாளர்களும் மயங்கி விடுகிறார்கள். ரத்னத்துடன் பிரச்சனை வந்தவுடன் போனிகபூரிடம் சென்றார் அஜித்.
10 தயாரிப்பாளர்களை கூட அஜித்தால் பிடிக்க முடியாது. சக்கரவர்த்தியுடன் அவர் நீண்ட நாட்களாக பயணித்து வந்தார். அவருடன் பிரச்சினை ஏற்பட்ட உடன் தயாரிப்பாளரை மாற்றி விட்டார். சக்கரவர்த்தி மிகவும் நல்லவர். ஆனால் அஜித் ஒன்னா நம்பர் திருடன்” என்று தெரிவித்துள்ளார்.
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil
எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு மேலும் இரண்டு சிறைச்சாலை பேருந்துகள் தேவை : அமைச்சர் அறிவிப்பு IBC Tamil