முட்டாள்கள் தினம்.. ரசிகர்களை கிண்டலடித்து சிரித்த நடிகர் அஜித் - வைரலாகும் Video!

Ajith Kumar Tamil Cinema Tamil Actors Tamil Actress VidaaMuyarchi
By Jiyath Apr 02, 2024 10:39 AM GMT
Report

நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் கலகலப்பாக பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் 

மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

முட்டாள்கள் தினம்.. ரசிகர்களை கிண்டலடித்து சிரித்த நடிகர் அஜித் - வைரலாகும் Video! | Actor Ajith Cracks A Joke Signs Autograph For Fan

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு "குட் பேட் அக்லி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளது.

ஒரு 5 நிமிஷம் வச்சிப்பேன்.. ரோட்ல பார்த்தாக்கூட தூக்கிப்பேன் - ஓப்பனாக சொன்ன ஷகிலா!

ஒரு 5 நிமிஷம் வச்சிப்பேன்.. ரோட்ல பார்த்தாக்கூட தூக்கிப்பேன் - ஓப்பனாக சொன்ன ஷகிலா!

ரசிகர்களுடன் அஜித் 

'குட் பேட் அக்லி' படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த படத்தில் 3 வேடங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 1) இருசக்கர வாகன நிறுவனத்தில் பணியாற்றும் ரசிகர்களை நடிகர் அஜித் சந்தித்தார்.

முட்டாள்கள் தினம்.. ரசிகர்களை கிண்டலடித்து சிரித்த நடிகர் அஜித் - வைரலாகும் Video! | Actor Ajith Cracks A Joke Signs Autograph For Fan

அதில், சிலர் அவரிடம் கையொப்பம் பெற்றனர். அப்போது அஜித், "சரியாக முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே" எனக் கிண்டலாகக் கூறினார். அங்கிருந்தவர்கள் இதைக் கேட்டதும் சிரித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.