நான் ரெடியா இருந்தேன்.. யாரும் கூப்பிடல; விலகல் ஏன்? நடிகை சுகன்யா ஓபன் டாக்!
சினிமாவிலிருந்து விலகியது குறித்து நடிகை சுகன்யா மனம் திறந்துள்ளார்.
நடிகை சுகன்யா
1990 களில் தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. புது நெல்லு புது நாத்து படத்தில் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து சின்னகவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம். ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
இதற்கிடையில் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை ஓராண்டுக் கூட நீடிக்காமல் விவாகரத்து செய்தனர். அதில், மனவேதனை அடைந்த சுகன்யா தனிமையில் வசித்து வந்த அவர் சின்னத்திரையிலும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளிலும் வலம் வந்த வண்ணம் இருந்தார்.
சினிமாவில் விலகல்
கடைசியாக அவரது நடிப்பில் தீ இவன் என்ற படம் வெளியானது. இந்நிலையில், இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், "சினிமாவிலிருந்து நானாக விலகவில்லை. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நான் நடித்த படங்களுக்கு விருதுகளும் கிடைத்தன. எனக்கு பெயரும் கிடைத்தன.
ஆனால் அதை பற்றி யாருமே பேசவில்லை. படங்களில் தொடர்ந்து நான் நடிக்க தயாராக இருந்தேன். ஆனால் யாரும் என்னை அழைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.