நடிகை சுகன்யா எதற்காக விவாகரத்து செய்தார்? - வெளியான முக்கிய தகவல்..!

Sukanya Tamil Cinema
By Thahir Apr 21, 2022 10:23 AM GMT
Report

1990 களில் தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகை என பெயர் பெற்றவர் ஆர்த்திதேவி. இவர் சினிமாவுக்காக தனது பெயரை சுகன்யா என மாற்றிக்கொண்டார்.

புது நெல்லி புது நாத்து படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆர்த்தி தேவி என அறிமுகமான இவரின் பெயரை மாற்றியது பாரதிராஜா தான்.

நடிகை சுகன்யா எதற்காக விவாகரத்து செய்தார்? - வெளியான முக்கிய தகவல்..! | Actor Suganya Divorce New Information Leaked

நடிகை சுகன்யா நடித்த சின்னகவுண்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, திருமதி பழனிச்சாமி,

செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம். ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

இந்நிலையில் 2000 ஆயிரம் ஆண்டுக்கு பிறகு இவருக்கான பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனிடையே கடந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை ஓராண்டுக்கூட நீடிக்கவில்லை.

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். திருமணத்திற்கு பின் சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், கணவருக்கோ சுகன்யாநடிப்பது பிடிக்கவில்லையாம்,

இதனால், திரைப்படம் மற்றும் டிவியில் நடிக்கக்கூடாது என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை போட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல், எக்குத்தப்பான கேள்விகளையும் கேட்டுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த சுகன்யா அவரை விவாகரத்து செய்துள்ளார். 51 வயதான நிலையில் நடிகை சுகன்யா தற்போது தனிமையில வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.