மகளை சினிமாவிலிருந்து தள்ளிவைத்திருந்த சுகன்யா? வைரலாகும் ஃபோட்டோ - வாய் பிளக்கும் ரசிகர்கள்!
நடிகை சுகன்யாவின் மகள் புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை சுகன்யா
1990 களில் தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. புது நெல்லி புது நாத்து படத்தில் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து சின்னகவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம். ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
வைரல் ஃபோட்டோ
இதற்கிடையில் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை ஓராண்டுக் கூட நீடிக்கவில்லை. அதன்பின் சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார்.
கணவருக்கு சுகன்யா நடிப்பது பிடிக்காமல் விவாகரத்து செய்தனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அதில், மனவேதனை அடைந்த சுகன்யா தனிமையில் வசித்து வந்தார். தொடர்ந்து, சின்னத்திரையிலும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளிலும் வலம் வந்த வண்ணம் உள்ளார்.
தனது மகளை சினிமாவிலிருந்தும், மீடியாவிடமிருந்தும் தள்ளியே வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரது மகள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.