அந்த இடத்தில் பம்பரம் விடும் சீனில் எனக்கே... பிரபல நடிகர் குறித்து சுகன்யா ஓபன்டாக்!
நடிகர் விஜய்காந்த் குறித்து சுகன்யா மனம் திறந்துள்ளார்.
நடிகை சுகன்யா
நடிகையாகவும், பரதநாட்டிய கலைஞராகவும் அறியப்படுபவர் சுகன்யா. சின்னகவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே,சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சின்ன கவுண்டர் திரைப்படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
சின்னகவுண்டர்
அதில், விஜயகாந்த் சாரிடம் பேசுவதற்கு நான் மிகவும் பயப்பட்டேன். நாட்கள் செல்ல செல்ல அவருடன் எளிமையாக பழகி விட்டேன். குறிப்பாக தொப்புளில் பம்பரம் விடும் காட்சியை நான் கேட்ட பொழுது எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால், அதனை எந்த ஒரு ஆபாசமும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியாக அருமையாக இயக்கியிருந்தார் இயக்குனர் ஆர்பி உதயகுமார்.

இப்பொழுதும் அந்த காட்சியை பலரும் ரசிக்கிறார்கள். அந்த காட்சி படமாக்கப்படும் பொழுது எனக்கு எந்தவிதமான ஒரு பயமும் கிடையாது. குறிப்பாக விஜயகாந்த் சாரின் படப்பிடிப்பு தளத்தில் பெண்களுக்கு எப்படியான ஒரு பாதுகாப்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan