ஒரே வருசத்துல divorce....50 வயசுல Re-marriage....ஓப்பனாக சொன்ன சுகன்யா
நடிகை சுகன்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது விவாகரத்து குறித்தும், மறுமணம் குறித்தும் பேசியுள்ளது கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றன.
நடிகை சுகன்யா
90-களின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. கமலுடன் இந்தியன், விஜயகாந்துடன் சின்ன கவுண்டர், பிரபுவுடன் சின்ன மாப்பிள்ளை, சத்யராஜுடன் வால்டர் வெற்றிவேல் என அடுத்தடுத்த மிக பெரிய வெற்றி படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவருக்கும் அமெரிக்காவில் வசித்து வந்த ஸ்ரீதர் என்பவருக்கும் கடந்த 2002-ஆம் திருமணம் நடைபெற, அது ஒரே ஆண்டில் முடிந்து போனது. கருத்து வேறுபாடு காரணமாக சட்டபூர்வமாக கணவரை பிரிந்த பிறகு, அவ்வப்போது படங்களிலும் நடிக்க துவங்கினார் சுகன்யா.
மறுமணம் குறித்து பதில்
இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மறுமணம் குறித்து, கசப்பான திருமண வாழ்வு குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அந்த பேட்டியில், நெறியாளர் மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா? என கேட்க, இதுவரை அப்படி ஒரு எண்ணம் தனக்கில்லை என கூறிய சுகன்யா, தனக்கு தற்போது 50 வயது ஆகிறது என்றும் இனி கல்யாணம், குழந்தை எல்லாம் இல்லை என தெரிவித்து, நான் மறுமணம் வேண்டும் என்றும் சொல்லவில்லை, வேண்டாம்னு என்றும் மறுக்கவில்லை என பதில் அளித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்ட சலேவின் சித்திரவதை காட்சிகள்! கம்மன்பில பெரும் குற்றச்சாட்டு IBC Tamil