சமந்தா குறித்து ஓப்பனாக பேசிய துலிபா - வைரலாகும் தகவல்!
நடிகை சோபிதா சமந்தா குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை சோபிதா
பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா. இவர் நடிகை நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
அதன்பிறகு இருவருமே தங்களது படங்களில் பிஸியாக நடித்து வந்த நிலையில், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் பரவியது.
சமந்தா கேரக்டர்
தொடர்ந்து, நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்தார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி நடிகை சமந்தா குறித்து, அவரது வருங்கால மனைவி சோபிதா பேசிய கருத்துகள் வைரலாகி வருகிறது. அதில், சமந்தா சூப்பர் கூலான கேரக்டரைக் கொண்டவர்.
அவரது திரைப்படங்களைப் பார்த்தால் அவற்றை சமந்தா கையாண்ட விதம் புரியும். உண்மையாகவே அவர் கூலான நடிகை என்று தெரிவித்துள்ளார்.தற்போது அந்த நேர்காணல் வீடியோ ஒன்று வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.