2 பேருடன் காதல்; ஏமாந்திருக்கேன்.. பிரிவு குறித்து மனம் திறந்த நாகசைதன்யா!
ரிலேஷன்ஷிப் குறித்து நாகசைதன்யா பேசியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நாகசைதன்யா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் கெரியரில் பிஸியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் தங்கள் உறவை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ரிலேஷன்ஷிப்
கடைசியாக நாகசைதன்யா கஸ்டடி படத்தில் நடித்தார். அடுத்ததாக சந்து மொண்டேடி இயக்கும் ‘’தண்டெல்'' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரிலேஷன்ஷிப் குறித்து நாகசைதன்யா பேசிய ஒரு பழைய வீடியோ வைரலாகி வருகிறது. பட ப்ரோமஷன் ஒன்றில்,
நாகசைதன்யாவிடம் எப்போதாவது இரண்டு முறை ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "நான் இரண்டு பேரை காதலிச்சேன். அதில் ஒரு காதலில் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்.
அந்த அனுபவங்கள் தான் வாழ்க்கையில் வளர உதவியது. எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும். எனக்கு எல்லா அனுபவங்களும் இருக்கிறது. இப்போது அதில் இருந்து மீண்டிருக்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
