சமந்தாவை பார்த்தா என்ன செய்வீங்க? நச்சுன்னு ஒரு பதில் சொன்ன நாகசைதன்யா!

Samantha Naga Chaitanya Gossip Today
1 மாதம் முன்

சமந்தாவை மீண்டும் நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு நாக சைதன்யா சுவாரஸ்யமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.

நாக சைதன்யா

சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் பிரிவை அறிவித்தனர். அவர்கள் தங்கள் விவாகரத்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து, அதைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமந்தாவை பார்த்தா என்ன செய்வீங்க? நச்சுன்னு ஒரு பதில் சொன்ன நாகசைதன்யா! | Nagachaitanya Says About Samantha

கடந்த சில வாரங்களாக, நாக சைதன்யா, சமந்தா அளித்து வரும் நேர்காணல்களில் தங்களின் பிரிவைப் பற்றி பேசி வருகின்றனர். அந்த வகையில், காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, நாக சைதன்யாவுடன் பிரிந்த பிறகு ஒரே அறையில் தன்னை வைத்திருந்தால்,

சந்தித்தால்..?

கூர்மையான பொருட்களை மறைத்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவர் மீது தனக்கு கடினமான உணர்வுகள் இருப்பதாகவும் சமந்தா தெரிவித்தார்.. இந்நிலையில் பிரபல ஊடகத்திற்கு நாக சைதன்யா பேட்டியளித்தார்.

சமந்தாவை பார்த்தா என்ன செய்வீங்க? நச்சுன்னு ஒரு பதில் சொன்ன நாகசைதன்யா! | Nagachaitanya Says About Samantha

அப்போது, சமந்தாவை இப்போது சந்தித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. “நான் ஹாய் சொல்லி அவளை கட்டிப்பிடிப்பேன்..” என்று கூறினார். 2017-ல் நடைபெற்ற பிரமாண்ட திருமணத்திற்குப் பிறகு, நாக சைதன்யா தனது திருமண தேதியை மோர்ஸ் குறியீட்டில் பச்சை குத்தினார்.

 திருமண தேதி டாட்டூ

இதுகுறித்தும் அந்த பேட்டியில் நாக சைதன்யா பேசினார். தனது ரசிகர்கள் சிலர் அதே டாட்டூவை பச்சை குத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும், பேசிய அவர் “என் பெயரை பச்சை குத்திய சில ரசிகர்களை நான் சந்தித்தேன், அவர்கள் என் திருமண தேதியை பச்சை குத்தியுள்ளனர்.

இது நீங்கள் பின்பற்ற வேண்டியதில்லை. எனக்கு கல்யாணம் ஆன நாள். அதனால் ரசிகர்கள் அதை போடுவதை நான் விரும்பவில்லை. அவர்கள் இந்த விஷயங்களை பச்சை குத்தும்போது நான் மிகவும் மோசமாக உணர்கிறேன்.” என்று தெரிவித்தார்.

நாக சைதன்யாவும் சமந்தாவும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.