படுகவர்ச்சியில் இறங்கிய நடிகை சமந்தா... - வைரலாகும் போட்டோ ஷுட் வீடியோ..!

Samantha Viral Video
By Nandhini Jun 12, 2022 07:59 AM GMT
Report

தென்னிந்திய சினிமாத்துறையில் முன்னணி நட்சத்திரமாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா.

இவருடைய சிரிப்பிலும், அழகிலும் மயங்காதவர் யாருமில்லை. அந்த அளவிற்கு கொள்ளையழகில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடிக்கிறார் நடிகை சமந்தா.

தற்போது விஜய் நிர்வாணா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக குஷி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்

கடந்த 28ம் தேதி நடிகை சமந்தா தன்னுடைய 35-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளான அன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி அள்ளியுள்ளது.

படுகவர்ச்சியில் இறங்கிய நடிகை சமந்தா... - வைரலாகும் போட்டோ ஷுட் வீடியோ..! | Samantha Viral Video

யசோதா படம்

இதனையடுத்து, சமந்தா தற்போது கிருஷ்ணா பிரசாத் தயாரித்துள்ளார் ‘யசோதா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கு இந்தி தமிழ் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் படமாக வெளியிடப்படவுள்ள இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஹரன் என இருவர் எழுதி இயக்குகின்றனர்.

சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவருடைய புகைப்படத்திற்கு இவருடைய ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெறிப்பார்கள்.

சமந்தா வீடியோ வைரல்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியில் சமந்தா போட்டோ ஷூட் நடத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஹார்ட் பீட் எகிறியுள்ளது. செம்ம கவர்ச்சி ஸ்டைலில் சமந்தா போட்டோ ஷூட் வீடியோ இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.