இப்போ அவர் மீதுதான் அதிக காதல் இருக்கு - கணவர் இறந்த நிலையில் நடிகை ஸ்ருதி உருக்கம்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
மறைந்த தன் கணவர் குறித்து நடிகை ஸ்ருதி பேசியுள்ளார்.
நடிகை ஸ்ருதி
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகை ஸ்ருதி. அதில் பிரபல சீரியலான நாதஸ்வரம் மூலம் பிரபலமானவர். இவர் அரவிந்த் சேகர் என்பவரை 2022ல் திருமணம் செய்துக்கொண்டார்.
கடந்தசில மாதங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் அரவிந்த் சேகர் மரணமடைந்தார். ஃபிட்னஸில் ஆர்வம் கொண்ட அரவிந்த் ’மிஸ்டர் தமிழ்நாடு 2022’ பட்டம் வென்றவர். இவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மறைந்த கணவர்
திருமணத்துக்குப் பின் சீரியலை விட்டு விலகி பிசினஸில் ஸ்ருதி கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி சமீபத்திய பேட்டி ஒன்றில், “ என் கணவர் அரவிந்த் என்னுடன் இல்லை என்பதை நான் உணரவே இல்லை. அதை என்னைச் சுற்றி இருப்பவர்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
உண்மையச் சொல்ல வேண்டும் என்றால் முன்பிருந்ததை விட அரவிந்த் மேல் இருக்கும் காதல் இப்போது அதிகமாகி உள்ளது. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன். என் சோகம் மற்றவர்களையும் பாதிக்கக் கூடாது என்பதற்காகதான் முடிந்தவரை பாசிடிவ்வாக இருக்கிறேன்.
ஆனால், இரவு அரவிந்தின் புகைப்படத்தைப் பார்த்து ’எனக்கு மட்டும் வாழ்க்கையில் இப்படி எல்லாம் ஏன் நடந்தது?’ என்று நினைத்துப் பார்த்து கோடி முறை அழுது இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video

லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானம் வெடித்து சிதறிய தருணம்..! அதிர வைக்கும் விபத்து அறிக்கை IBC Tamil

ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி : அமெரிக்க வெளியுறவுத்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிநீக்கம் IBC Tamil
