40 வயதாகியும் கல்யாணம் செஞ்சுக்கல.. இதுதான் காரணம் - பிரபல சீரியல் நடிகை பளீச்
திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து நடிகை ஸ்ருதி ராஜ் பேசியுள்ளார்.
ஸ்ருதி ராஜ்
தென்றல் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். தொடர்ந்து, ஆபிஸ், அழகு, கண்ணான கண்ணே, அருவி, பிரியமான தோழி, இலக்கியா சீரியல்களில் நடித்திருந்தார்.

மேலும், காதல்டாட் காம், மந்திரன், ஜெர்ரி, இயக்கம் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
திருமணம்?
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக நடந்தது கிடையாது. எனவே என் திருமணம் குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை.

என்னை பற்றியும் எனது திருமணம் குறித்தும் எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என கூறியுள்ளார். அதாவது நீங்கள் ஏன் இதை கேட்கிறீர்கள். என் எதிர்காலத்தை என் பெற்றோர் பார்த்துக் கொள்வர் என பதிலளித்துள்ளார்.
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan