2வது முறையாக சீரியல் நடிகை ரேஷ்மா திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சீரியல் நடிகை ரேஷ்மா 2-வது முறையாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
ரேஷ்மா
சின்னத்திரையில் சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ரேஷ்மா மற்றும் மதன். இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகும் இருவரும் சேர்ந்து தொடர் ஒன்றில் நடித்து வந்தனர். தொடர்ந்து, எந்த புராஜெக்டிலும் நான் இல்லை. வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
2-வது திருமணம்
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்கள் இருவரும் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே திருமணமான இவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதற்கு கேப்ஷனாக ஒன்ஸ் அகைன் எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த வீடியோ தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.