கர்ப்பமா? கடுப்பாகி கலாய்த்த சீரியல் நடிகை ரேஷ்மா!

Pregnancy Reshma Pasupuleti Instagram
By Sumathi Sep 11, 2022 02:55 PM GMT
Report

கர்ப்பமா இருக்கிறீர்களா என்று கேட்ட ரசிகரை கோபத்துடன் கலாய்த்து சீரியல் நடிகை ரேஷ்மா பதில் அளித்துள்ளார்.

 ரேஷ்மா-மதன்

சின்னத்திரையில் சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ரேஷ்மா மற்றும் மதன். இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

கர்ப்பமா? கடுப்பாகி கலாய்த்த சீரியல் நடிகை ரேஷ்மா! | Reshma Madhan Reply To Fans Question

திருமணத்திற்கு பிறகும் இருவரும் சேர்ந்து தொடர் ஒன்றில் நடித்து வந்தனர். தற்போது, ரேஷ்மா மற்றும் மதன் ஜோடி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

கர்ப்பமா?

இந்நிலையில், ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’தற்போது எந்த புராஜெக்டிலும் நான் இல்லை. வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்று கூறியிருந்தார். அதற்கு நெட்டிசன் ஒருவர், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

கர்ப்பமா? கடுப்பாகி கலாய்த்த சீரியல் நடிகை ரேஷ்மா! | Reshma Madhan Reply To Fans Question

இதை பார்த்து கோபமான ரேஷ்மா, யப்பா, இல்லப்பா. எத்தனை பேர் தான் கிளம்பி இருக்கீங்க. என்று காட்டமாக பதில் கூறினார். மேலும் கேள்வி கேட்ட நபர் Pregnant என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்திருப்பதை குறிப்பிட்டும் ரேஷ்மா கலாய்த்து பதிவிட்டார்.

இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.