பிரிந்தது உடல் மட்டும் தான் - உருக்கமாக பதிவிட்ட ஸ்ருதி சண்முகப்ரியா

Tamil Cinema Death Tamil TV Serials Actress
By Karthick Aug 04, 2023 05:15 AM GMT
Report

மறைந்த தனது கணவர் அரவிந்த் குறித்து நடிகை ஸ்ருதி சண்முகப்ரியா உருக்கமாக பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிந்தது உடல் மட்டும் தான் - உருக்கமாக பதிவிட்ட ஸ்ருதி சண்முகப்ரியா | Sruthi Sanmugapriya Instagram Post

திடீர் மரணம் 

நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்ரியா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

உடல் பயிற்சியாளராக அரவிந்த் 2022-ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான ஒரே ஆண்டில் திடீரென நேற்று அரவிந்த் மாரடைப்பு காரணமாக மரணித்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பிரிந்தது உடல் மட்டும் தான் - உருக்கமாக பதிவிட்ட ஸ்ருதி சண்முகப்ரியா | Sruthi Sanmugapriya Instagram Post

உருக்கமான பதிவு

இந்நிலையில், தனது கணவர் குறித்து நடிகை ஸ்ருதி சண்முகப்ரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில்,"பிரிந்தது உடல் மட்டும் தான், ஆனால் உங்கள் ஆன்மாவும் மனமும் என்னை சுற்றி இப்போதும் எப்போதும் பாதுகாக்கும்.

Rest in peace என் அன்பே என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.