பிரபல நடிகை சடலமாக மீட்பு - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
பிரபல கன்னட நடிகை ஷோபிதா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஷோபிதா சிவன்னா
பிரபல கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா (30). ரங்கி தரங்கா படம் மூலம் அறிமுகமானவர். கன்னடத்தில் Eradondla Mooru, ATM: Attempt to Murder, Vandana போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
மேலும், காலிபட்டா, மங்கள கௌரி உள்ளிட்ட சுமார் 12 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், ஹைதராபாத் கோண்டாபூரில் உள்ள அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தற்கொலை?
அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக தகவல்கல் வெளியாகியுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது, அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது இது கொலையா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட நடிகை ஷோபிதா சினிமா வாழ்க்கையை விட்டு விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.