நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்; மனமுடைந்த மகள் - ரசிகர்கள் ஆறுதல்
நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்.
நடிகை சமந்தா
நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பேருமே பரஸ்பர புரிதலோடு விவாகரத்து பெற்று பிரிந்தனர்
தொடர்ந்து மையோசிடிஸ் நோய் பாதிப்பால் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் தீவிர சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார். பின் சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது.
தந்தை மறைவு
இந்நிலையில், சமந்தாவின் தந்தையான தெலுங்கு - ஆங்கிலோ இந்தியனான ஜோசப் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில், 'Until we meet again Dad' என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். இதையறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.