சீரியல்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
சீரியல் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சீரியல்
தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சமூக வலைதளங்களில் சின்னத்திரை நடிகர், நடிகைகளை பின் தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சினிமாவில் நடிகர்களுக்கு லட்சங்கள் முதல் கோடிகள் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சின்னத்திரையிலும் நடிகர்கள் பெறும் சம்பளம் குறித்து அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
டாப் சம்பளம்
அந்த வகையில் சின்னத்திரையில் அதிக சம்பளம் பெறும் நடிகை குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுவாதி.
இவர் நாள் ஒன்றுக்கு 1 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இவருக்கு இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.