ஏன் வேனுமானு யோசிச்சேன்..ஒருகட்டத்தில் நடந்துட்டு - மனம் திறந்த கருடன் பட நடிகை!
நடிகை ஷிவதா நாயர் திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை ஷிவதா நாயர்
2004 ஆம் ஆண்டு ஆரி அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் நெடுஞ்சாலை. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவதா நாயர்.
தொடர்ந்து, ஜீரோ, அதே கண்கள், நித்தம் ஒரு வானம், வல்லவனுக்கு வல்லவன், தீரக் காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது, சூரி நடிப்பில் சக்கைப்போடு போட்டு வரும் கருடன் படத்தில் நடித்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஷிவதா, நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். அவர் என்னுடன் கல்லூரியில் படித்தார். அப்போதிலிருந்து காதலித்துக் கொண்டிருக்கிறோம்.
திருமண வாழ்க்கை
நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்றாலும் கூட அடிக்கடி சேர்ந்து கொண்டு வெளியில் போது இல்ல, மணிக்கணக்கில் போனில் பேசியது இல்லை. இருவரும் காதலிக்கிறோம். அவர் அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பார், நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பேன்.
இப்படியேதான் எங்கள் காதல் நாட்கள் சென்றது. திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட கல்யாணம் வேணுமான கேட்டேன். அவர் அப்படியே ஷாக்காவி விட்டார்.
ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டோம் திருமணத்திற்கு பிறகும் அவர் எப்படி திருமணத்திற்கு முன்பு இருந்தாரோ அதேபோலத்தான் இப்போதும் என்னுடன் அன்பாக இருக்கிறார். என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு துணை நிற்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.