19 வருஷ திருமண வாழ்க்கை; தினமும் சண்டைதான்.. தனுஷ் அக்கா கூறிய விஷயம்!
தனுஷின் அக்கா இன்ஸ்டா பதிவு ட்ரெண்டாகியுள்ளது.
நடிகர் தனுஷ்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் பிரிந்துவிட்டார்கள்.

இதனையடுத்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் கலக்கி வருகிறார். தனுஷுக்கு 2 அக்காக்கள்.
வைரல் பதிவு
அதில் ஒருவர் கார்த்திகா பிரபலமான மகப்பேறு மருத்துவராக உள்ளார். கார்த்திகா மருத்துவர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், இருவரும் 19ஆவது திருமண நாளை கொண்டாடினர்.
அதுகுறித்த கார்த்திகா பதிவிட்ட இன்ஸ்டா பதிவில், “நமக்கு திருமண வாழ்த்துகள் கார்த்திக். ஒன்றாக 26 ஆண்டுகள்.. திருமணமாகி 19 ஆண்டுகள். ஒருநாள்கூட நமக்குள் சண்டை இல்லாமல் போனது கிடையாது.
நமது சண்டைகள் இல்லாமல் நான் இல்லை என்பது புரிந்துகொண்டேன்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ராதிகா உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil