Thursday, May 8, 2025

மகள் ஐஸ்வர்யாவுக்காக இறங்கி சென்ற ரஜினிகாந்த்; ஆனால்..கண்டுகொள்ளாத தனுஷ்!

Dhanush Rajinikanth Tamil Cinema Aishwarya Rajinikanth
By Sumathi a year ago
Report

நடிகர் ரஜினிகாந்த், தனுஷை அழைத்து பேசியதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் பிரிந்துவிட்டார்கள்.

dhanush - aishwarya

அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கின்ற போதிலும் விவாகரத்து பெறவில்லை.

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், மனுவில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி குறிப்பிட்டுள்ளனர்.

தனுஷ் வேணுமா? ஐஸ்வர்யா வேணுமா? - மகன்கள் எடுத்த முடிவு!

தனுஷ் வேணுமா? ஐஸ்வர்யா வேணுமா? - மகன்கள் எடுத்த முடிவு!

தனுஷ்- ஐஸ்வர்யா

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தனுஷை வீட்டுக்கு அழைத்துள்ளார். அதன்படி, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்குச் சென்ற தனுஷ், அவரை சந்தித்து பேசியுள்ளார்.

மகள் ஐஸ்வர்யாவுக்காக இறங்கி சென்ற ரஜினிகாந்த்; ஆனால்..கண்டுகொள்ளாத தனுஷ்! | Rajinikanth Spoked Dhanush Divorce With Aishwarya

மேலும், ஐஸ்வர்யாவும், தனுஷும் தங்கள் குழந்தைகளுக்காக ஒன்றாக வாழ முடியுமா என்று தனுஷிடம், ரஜினிகாந்த் கேட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, இருவரையும் சேர்த்து வைக்க ரஜினிகாந்த் மட்டுமின்றி தனுஷ் குடும்பத்தினரும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.