தனுஷ் வேணுமா? ஐஸ்வர்யா வேணுமா? - மகன்கள் எடுத்த முடிவு!
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகன்கள் குறித்த தகவல் கவனம் பெற்றுள்ளது.
தனுஷ் - ஐஸ்வர்யா
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அதன்பின் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் தாய் ஐஸ்வர்யாவுடன் உள்ளனர்.
தொடர்ந்து ஐஸ்வர்யா 2வது திருமணம் செய்யப்போவதாக செய்திகள் பரவிய வண்னம் இருந்தது. ஆனால் அது வெறும் வதந்தி எனத் தெரியவந்தது.
மகன்கள் உறுதி
தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காஉள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அதேபோல், சமீபத்தில் நடைபெற்ற கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் அப்பா தனுஷ் அருகே யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் அமர்ந்திருந்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
தொடர்ந்து அவர்களது மகன்கள் அப்பா மற்றும் அம்மா என இருவரது அன்பையும் நாடி வருவதால் குழந்தைகளுக்காக இருவரும் ஒன்றாக சேர வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
You May Like This Video