16 வருட திருமண வாழ்க்கை; விவாகரத்தால் கஷ்டப்பட்டேன் - சரத்குமாரின் முதல் மனைவி வேதனை!

Sarathkumar Varalaxmi Sarathkumar
By Sumathi Jul 25, 2023 05:30 PM GMT
Report

சரத்குமாரின் முதல் மனைவி விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சரத்குமார்

தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சரத்குமார். அதன்பின் தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். முன்னதாக, 1984ல் சாயா தேவி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது மகள் தான் நடிகை வரலட்சுமி.

16 வருட திருமண வாழ்க்கை; விவாகரத்தால் கஷ்டப்பட்டேன் - சரத்குமாரின் முதல் மனைவி வேதனை! | Divorce Sarathkumars First Wife

இருவரும் 2000ல் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், சரத்குமாரின் முதல் மனைவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சுற்றி இருப்பவர்கள் எல்லாம் திருமணம் செய்துகொள்கின்றனர்.

விவாகரத்து

வீட்டில் கட்டாயப்படுத்துகின்றனர், வயதாகிறது என்றெல்லாம் நினைத்து பலர் திருமணம் செய்துகொள்கின்றனர். அதன் பிறகு அந்த திருமண வாழ்க்கை பிடிக்காமல் சகித்துக்கொண்டு வாழ்கின்றனர், அல்லது விவாகரத்து செய்து பிரிந்து விடுகின்றனர்.

16 வருட திருமண வாழ்க்கை; விவாகரத்தால் கஷ்டப்பட்டேன் - சரத்குமாரின் முதல் மனைவி வேதனை! | Divorce Sarathkumars First Wife

மேலும் கணவன் மனைவி விவாகரத்து செய்து கொண்டு பிரியும் போது, சிறு குழந்தைகளிடம் தாய் வேண்டுமா? தந்தை வேண்டுமா? என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அது மிகவும் தவறு. ஒரு குழந்தைக்கு தாய், தந்தை இருவரும் தான் வேண்டும்.

விவகாரத்து செய்துகொண்டால் பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.நானும் அதை எல்லாம் கடந்து வந்தேன். தற்போது சேவ் சக்தி என்ற பெயரில் பெண்களுக்காக ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறேன். இதை தொடங்கியது என் மகள் வரலட்சுமி தான். இதன் மூலம் பல பெண்களுக்கு உதவி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.