60 வயதில் நடிகர் 2வது திருமணம்; மனம் புண்படும்படி..வைரலாகும் முதல் மனைவி பதிவு!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவியின் பதிவு வைரலாகி வருகிறது.
ஆசிஷ் வித்யார்த்தி
ஆசிஷ் வித்யார்த்தி(61) ஒரு பான் இந்திய நடிகர். அதிகமாக தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர், பாபா, கில்லி, மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர்.
11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது சிறந்த நடிப்பிற்காக 1995-ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார். பாடகர் மற்றும் நாடக கலைஞரான ராஜோஷி பருவாவை திருமணம் செய்திருந்தார்.
வைரல் பதிவு
இவர் பழைய நடிகையான சகுந்தலா பருவாவின் மகள். இந்நிலையில், தற்போது கவுகாத்தியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து அவரது முதல் மனைவி ராஜோஷி பருவா இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், 'ஒரு சரியான நபர் நீங்க என்ன செய்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்க மாட்டார். அதே போல் உங்கள் மனம் புண்படும்படியும் நடந்து கொள்ள மாட்டார். அதை நினைவின் வைத்துக்கொள்ளுங்கள். மேலும், மற்றொறு பதிவில் அதிக சிந்தனையும் சந்தேகமும் உங்கள் மனதில் இருந்து நீங்கட்டும்.
அமைதி உங்கள் வாழ்க்கையை தெளிவாக்கட்டும். நீண்ட காலமாக நீங்கள் வலிமையானவராக இருக்கிறீர்கள். உங்கள் ஆசீர்வாதங்களை பெறுவதற்கு சரியான நேரம் இது. நீங்கள் இதற்கு தகுதியாவானவர் தான் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.