வாய்ப்புக்காக வழிஞ்சா இப்படித்தான்.. யாரும் கையபுடிச்சிலாம் இழுக்கமாட்டாங்க - சங்கீதா பளீச்!
அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகை சங்கீதா பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை சங்கீதா
பிதாமகன், உயிர், தனம் போன்ற திரைப்படங்களில் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்தவர் நடிகை சங்கீதா. அண்மையில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பிரபல பின்னணி பாடகர் க்ரிஷை காதலித்து கடந்த 2009ல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 1 மகள் உள்ளார். இந்நிலையில், இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், விருப்பம் இல்லாதவர்களை, யாரும் கையபுடிச்சி இழுக்க மாட்டாங்க, அந்த அளவுக்கு யாருக்கும் தைரியம் இல்ல.
அட்ஜெஸ்ட்மெண்ட்
நாம மற்றவர்களிடம் எப்படி பழகுகிறோம் என்பதில் தான் விஷயம் இருக்கு. நாம சரியாக பழகினால், மற்றவர்களும் நம்மிடம் சரியாக பழகுவார்கள். படவாய்ப்பு தராங்கனு வழஞ்சிட்டு, சிரிச்சிட்டு நின்னா, இவங்க நம்ம எது சொன்னாலும் செய்வோம் என்று தவறாக நினைத்துவிடுவார்கள்.
இதனால், நாம சரியாக இருக்கனும். இதுதான் நான், படவாய்ப்பு கொடுத்தா கொடுங்க இல்லனா வேண்டாம் என்று நாம தெளிவா இருந்தா யார் நம்மகிட்ட தப்பா நடந்துப்பாங்க. என்கிட்ட யாரும் அப்படி தவறாக நடந்து கொள்ளவில்லை. அதையும் மீறி ஒரு சில விஷயம் நடந்தப்போ, எனக்கு அதில் விருப்பம் இல்லை என்பதை தெளிவாக அவர்களிடம் சொல்லிவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video