2 செலிப்ரடீஸ் கல்யாணம் பண்ணா இப்படித்தான்; நரக வாழ்க்கை - சங்கீதா வேதனை!
தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து நடிகை சங்கீதா மனம் திறந்துள்ளார்.
நடிகை சங்கீதா
உயிர், பிதாமகன், தனம், எவனோ ஒருவன், தம்பிக்கோட்டை, காளை, மன்மதன் அம்பு, வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. இவர் 2009ல் பிரபல பின்னணி பாடகர் க்ரிஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில், தனது காதல் மற்றும் திருமணம் குறித்து பேசியுள்ள சங்கீதா, காதலை சொல்லி ஆறு மாதத்திற்குள் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமண வாழ்க்கை
திருமணம் எங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும். கடைசி நிமிடம் வரைக்கும் திருமணம் நடக்குமா இல்லையா என்ற ஒரு பரபரப்போடு தான் எங்களுடைய திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடங்கள் நான் அதிகமாக கஷ்டப்பட்டேன். எல்லா பக்கத்தில் இருந்தும் எனக்கு பிரச்சனைகள் தான் வந்து கொண்டே இருந்தது.

எல்லாரும் நினைக்கிறாங்க இரண்டு செலிப்ரடீஸ் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்களோட வாழ்க்கை சந்தோசமா இருக்கும் என்று ஆனா அப்படியெல்லாம் இல்ல இரண்டு பிரபலங்கள் ஒன்றாவது திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்வது என்பது ஒரு உரைக்குள் இருக்கும் இரண்டு கத்தி என்பது போன்றது தான். நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா என்று ஒரு சண்டை பெருசா வரும்.
எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்க இருக்கணும். உங்களுக்கு ஒன்னுனா நான் இருக்கனும். அந்த அன்பு மட்டும்தான் நிலைத்திருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம். அதுபோல எங்களுடைய வாழ்க்கையில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு உலங்குவானூர்திகள் விபத்து IBC Tamil