16 வயதிலேயே திருமணம்; 2 விவாகரத்து - மாவீரன் நடிகையின் சினிமா வாழ்க்கை சீரழிந்த சோகம்!
நடிகை சரிதாவின் சொந்த வாழ்க்கையை பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை சரிதா
தமிழ் சினிமாவில் 80களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. 1978ம் ஆண்டு ‘தப்பு தாளங்கள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் சரிதா. அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

1988ல் பிரபல மலையாள நடிகர் முகேஷை காதலித்து திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஷர்வன், தேஜஸ் என்கிற இரு மகன்களும் உள்ளனர். 2011ல் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இந்நிலையில் இவர் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு,
2 விவாகரத்து
நடிகை சரிதா சினிமாவில் நுழைந்த உடன் 16 வயதிலேயே திருமணம் செய்துவிட்டார். தெலுங்கு நடிகர் வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், திருமண வாழ்க்கை அவருக்கு பெரிதாக செட்டாகாத சூழலில் 6 மாதத்திலேயே அவரை பிரிந்து விட்டார்.

அதன் பின்னர் வரிசையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களில் 10 வருடங்களில் பல படங்களில் நடித்து மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் அரசாங்கத்திற்கு பெரும் சிக்கல்! பதவி விலகிய முக்கிய புள்ளி IBC Tamil
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை IBC Tamil