நடிகை சரிதாவால் தன் மனைவியின் தாலியை அடகு வைத்த தயாரிப்பாளர்... - ஷாக்கான ரசிகர்கள்...!
நடிகை சரிதாவுக்காக தன் மனைவியின் தாலியை அடகு வைத்த தயாரிப்பாளரை பற்றிய தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை சரிதா
தமிழ் சினிமாவில் 80களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா.
1978ம் ஆண்டு ‘தப்பு தாளங்கள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் சரிதா. முதல் படத்திலேயே, தன் மென்மையான அழகாலும், நடிப்பு திறமையாலும் ரசிகர் மனதை கவர்ந்தார். நடிகர் தியாகராஜனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘மலையூர் மம்பட்டியான்’ என்ற திரைப்படம்.
இப்படத்தில் சரிதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
அதிக கவர்ச்சி காட்டாமல், குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார் சரிதா. இதற்கிடையில், கடந்த 1988ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் முகேஷை காதலித்து திருமணம் செய்தார் சரிதா. இத்தம்பதிக்கு ஷர்வன், தேஜஸ் என்கிற இரு மகன்களும் உள்ளனர்.
தாலியை அடகு வைத்த தயாரிப்பாளர்
படப்பிடிப்பிற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்த நிலையில் எல்லா டெக்னிஷியன்களும் கூடிய நிலையில் பணம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று சரிதா கூறியதாக தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒரு பேட்டியில் பிரபல தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி பேசுகையில்,
‘மலையூர் மம்பட்டியான்’ படம் திருப்பதியில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு அனைவரும் படப்பிடிப்பிற்கு போக, நடிகை சரிதா முதலில் சம்பளத்தை கொடுங்க... சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாய் கூறியிருக்கிறார்.
இதனால், திருப்பதிக்கு படப்பிடிப்பிற்காக போனவர்கள் 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்தாமல் சும்மாவே இருந்தனர். இப்படத்தை சிறிய முதலீட்டில் நண்பர்கள் சேர்ந்து வைத்த பணத்தில் படத்தை எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், நடிகை சரிதா இப்படி சொன்னதும் என் நண்பருக்கு உதவி செய்ய முன் வந்தேன்.
நான் என்னுடைய மனைவி கட்டியிருந்த தாலியை கழட்ட சொன்னேன். பிறகு, மஞ்சள் கயிறு கட்ட சொல்லிவிட்டு, அந்தத் தாலியை அடகு வைத்து கொடுத்தேன். இதன் பிறகு சரிதாவிற்கு பணத்தை கொடுத்துள்ளனர். பிறகு சரிதாவை விமானத்தில் ஏற்றி அனுப்பி விட்டு படப்பிடிப்பை நடத்தினர் என்றார்.