நிறத்தை காரணம் காட்டி அதெல்லாம் பண்ணிருக்காங்க; மனசு வலிக்கும் - நடிகை ரித்விகா!
தனக்கு நடந்த அவமானங்கள் குறித்து நடிகை ரித்விகா ரித்திகா பேசியுள்ளார்.
தமிழா தமிழா
ஜீ தமிழில் தொலைக்காட்சியில் 'தமிழா தமிழா' என்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் கருப்பழகு கணவன்கள் Vs சிவப்பழகு மனைவிகள் என்ற பெயரில் விவாதம் நடைபெறவுள்ளது.

இதில், கருப்பழகு கணவன்மார்களும், சிவப்பாக இருக்கும் அவர்களது மனைவிகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் சிறப்பு விருந்தினராக நடிகை ரித்விகா கலந்து கொண்டுள்ளார்.
நடிகை ரித்திகா
அவர் பேசுகையில் "நான் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் நிறத்தால் எனக்கு பல திரைப்படங்கள் ரிஜெக்ட் ஆகி இருக்கிறது. நேரடியாகவே சிலர் நாங்கள் இந்த படத்திற்கு கலராக இருக்கும் பெண்ணை தேடுகிறோம் என்று சொல்லிவிடுவார்கள்.

ஆனால், படம் வெளியான பிறகு அந்த நடிகை ஏற்கனவே கலரா இருப்பாங்க. அவங்களையும் கலர் கம்மியாக நடிக்க வைத்திருப்பார்கள். அப்போ நமக்கு மனசு வலிக்கும்" என்று தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan