அடிச்ச ஜாக்பாட் நிகழ்ச்சியில் தோற்ற பெண் போட்டியாளர் - மேடையில் வாய்ப்பளித்த நடிகர்

Tamil Actors Mirchi Senthil Kumar
By Karthick Apr 16, 2024 05:09 PM GMT
Report

நடனத்தை மையமாக வைத்து நடைபெற்று வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ்.

நடன நிகழ்ச்சி

தொலைக்காட்சிகளில் தற்போது பாடல், நடனம், பேச்சு என பல திறமைகளை வெளிக்கொண்டு வரும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் வெற்றிபெறும் சிலர் குறிப்பிடத்தக்க ஒரு இடத்தையும் அடைந்து விடுகிறார்கள்.

dance jodi dance finals

ஆனால், பலர் என்னவானார்கள் என்பது நமக்கு தெரியாமலே போய்விடுகிறது. இருப்பினும், தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அப்படி நடைபெற்று வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி அண்மையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார்.

dance jodi dance finals

இதில் நவீன் - அக்ஷதா ஜோடி வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இறுதி போட்டியில் 2-வது இடத்தில் இப்ராஹிம் அக்ஷிதா ஜோடியும் 3-வது இடத்தில் விவேக் - கௌரி ஜோடி தேர்வு செய்யப்பட்டது.

நடிக்கும் வாய்ப்பு

இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகையாக வேண்டும் என ஆசை கொண்டிருந்த கௌரி, போட்டியில் தோல்வியடைந்த போதிலும், அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

ஷூட்டிங்கில் யாருமே அப்படிலாம் பண்ண மாட்டாங்க - ஆனா வடிவேலு!! போட்டுடைத்த நடிகை கௌதமி

ஷூட்டிங்கில் யாருமே அப்படிலாம் பண்ண மாட்டாங்க - ஆனா வடிவேலு!! போட்டுடைத்த நடிகை கௌதமி

நடிகையாகவேண்டும் என ஆர்வம் கொண்டுள்ள அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பிரபல சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் அளித்துள்ளார். அவர் நடித்து வரும் அண்ணா என்ற தொடரின் வீரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை மேடையில் கொடுத்து கௌரியை நெகிழ வைத்துள்ளார் மிர்ச்சி செந்தில்.

dance jodi dance finals

அதே போல போட்டியாளர்களில் ஒருவரான ஜான் எட்வின் என்பவரின் தந்தைக்கு கடை ஒன்று வைத்து கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.