மறுமணம் பற்றி மீனாவிடம் பேசிய கலா மாஸ்டர் - அதற்கு அவரின் பதில் இதுதான்!
நடிகை மீனா குறித்து அவரது நெருங்கிய நண்பர் கலா மாஸ்டர் பேசியுள்ளார்.
நடிகை மீனா
90ஸ்களில் பலரின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் 'ஒரு புதிய கீதை' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மீனா கடந்த 2009-ம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், அவர் கடந்த 2022-ம் ஆண்டு நுரையீரல் நோய் காரணமாக இறந்துவிட்டார். சமீபத்தில் மீனாவின் நெருங்கிய நண்பரான நடன இயக்குநர் கலா மாஸ்டர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் "எனக்கு மீனாவுடன் 25 வருட பிரண்ட்ஷிப்.
கலா மாஸ்டர்
அதுவும் சாதாரண பிரண்ட்ஷிப் கிடையாது, குடும்ப பிரண்ட்ஷிப். நாங்கள் நண்பர்களாகவும் இருப்போம், பிரண்ட்ஸாகவும் இருப்போம். அவளின் கணவருக்கு உடல்நிலையை சரியில்லாமல் இருந்த 3 மாதம் நான் மீனாவுடன் தான் இருந்தேன்.

அவளை பற்றி சொல்லவேண்டும் என்றால் சினிமாவுக்கும், அவள் ஹீரோயினாக இருப்பதற்கும் சம்மந்தமே கிடையாது. மீனா ஒரு மென்மையான மனம் கொண்டவள். மீனாவின் கணவர் இறந்த பிறகு நான் அவளிடம் "உனக்கு வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும், உனக்கு சின்ன வயசுதான்" என்று சொன்னால் என்னை திட்டுவாள்.
உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க. வேண்டாம் அக்கா.. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் என்று மீனா சொன்னாள். நான் வாயை மூடிக்கொண்டு போயி விடுவேன்" என்று கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil