வலுக்கட்டாயமாக உதட்டில் முத்தமிட்ட ஹீரோ - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!

Rekha Tamil Cinema Actress
By Vidhya Senthil Sep 27, 2024 06:29 AM GMT
Report

 பிரபல நடிகையின் முதல் படத்தில் கதாநாயகன் வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளார்.

 பிரபல நடிகை

கருப்பு-வெள்ளை திரைத்துறை காலகட்டத்தில் ஜாம்பவான்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் தவிர, அந்த காலத்தைக் கலக்கிய மற்றொரு நடிகர் ஜெமினி கணேசன் என்றே சொல்லலாம்.

actress

காதல் மன்னன் என்று ஜெமினி கணேசனை இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது. அப்படி அவருக்கும் நடிகை புஷ்ப வல்லிக்கும் பிறந்த மகளாக திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ரேகா என்கிற பாணு ரேகா கணேசன்.

பிடிக்காத உறவு..கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நடிகை- அடுத்த அதிர்ச்சி!

பிடிக்காத உறவு..கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நடிகை- அடுத்த அதிர்ச்சி!

1969 ஆம் ஆண்டு அஞ்சனா சஃபர் என்ற படத்தில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 15.அந்த படத்தில் ஹீரோ பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு 32 வயது ஆனது. சமீபத்தில் தனது முதல் படத்தில் நடித்திருந்த அதிர்ச்சிகரமான அனுபவம் குறித்து ரேகா பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

முத்தமிட்ட ஹீரோ

அப்போது அவர் கூறியதாவது : தனது முதல் படமான அஞ்சனா சஃபர் பின்னாளில் தோ ஷிகாரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு காட்சியில் ஹீரோ பிஸ்வஜித்தும் தானும் நெருக்கமான தருணத்தில் முத்தக் காட்சிப் பதிவாக்கப்பட்டது.

bhanu rekha

அப்போது இயக்குநர் ஆக்ஷன் சொன்னதும் பிஸ்வஜீத் சாட்டர்ஜி, தன் உதட்டில் 5 நிமிடங்கள் விடாது முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்து அங்குக் கதறி அழுது கொண்டே இருந்தேன்.

படத்திலும் இந்த காட்சி ஒரு வினாடி கூட குறைக்கப்படவில்லையாம். ஆனால் அஞ்சனா சஃபர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.