சினிமாவுக்கு முன் அந்த தொழிலில் பிரியங்கா மோகன் - பரவும் தகவல்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை பிரியங்கா மோகன் செய்த வேலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரியங்கா மோகன்
கன்னடத்தில் வெளியான ஒந் கதே கெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதையடுத்து தெலுங்கில் 'கேங் லீடர்', 'ஸ்ரீகரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின், தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் படங்களின் மூலம் பிரபலமானார். தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்து விட்டார். தற்போது, நடிகர் கவினின் 6வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கவுள்ள நிலையில்,
மாடலிங்
அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில் கவின், எஸ்ஜே சூர்யா காம்பினேஷன் காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரியங்கா மோகன் சினிமாவிற்கு வருவதற்கு முன் சின்ன சின்ன விளம்பரங்களில் மாடல் அழகியாக இருந்த
இவருக்கு கணிசமான வருமானமே வந்துள்ளது. ஆனால், இவருடைய பவ்யமான தோற்றம் அழகால் இவருக்கு கன்னடப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதனை அடுத்து இவர் நடிப்பு கலையில் பயிற்சி எடுத்துக் கொண்டு சிறப்பாக நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.