சூப்பர் ஸ்டார் வேஸ்ட்; யாருக்கும் ஒரு பயனும் இல்ல - கிழித்து தொங்கவிட்ட பூ பட நடிகை!
சூப்பர் ஸ்டார் பட்டத்தை விளாசியுள்ளார் நடிகை பார்வதி திருவொத்து.
நடிகை பார்வதி
திரையுலகில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்களை 'சூப்பர் ஸ்டார்' என்பார்கள். அந்த வகையில் நம்மைப் பொறுத்தவரை இந்தியில் ஷாருக்கான், மலையாளத்தில் மம்முட்டி ஆகியோரை சொல்வோம்.
இதுவே தமிழ் திரையுலகில் 'சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கத் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இந்நிலையில் 'அவுட் ஆப் சிலபஸ்' என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பார்வதி திருவொத்து. தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
சூப்பர் ஸ்டார் பட்டம்
தொடர்ந்து சென்னையில் ஒருநாள், மரியான், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பார்வதியிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "சூப்பர்ஸ்டார்டம் (superstardom) யாருக்கும், எதுவும் தராது.
சூப்பர் ஸ்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் யாருக்காவது பயன் ஏற்பட்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் என்றால் இமேஜா இல்லை ஒருவரது செல்வாக்கா இல்லை ரசிகத்தனம் முற்றி பைத்தியமாகிறவர்கள் வைக்கிற பெயரா எதுவென்று எனக்குத் தெரியவில்லை.
சூப்பர் ஆக்டர் என்றால் எனக்கு மகிழ்ச்சி. ஸ்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று விளாசியுள்ளார். மேலும் மலையாளத்தின் 3 சூப்பர் ஆக்டர்கள் பகத் பாசில், ஆசிப் மற்றும் ரீமா என்றார்.