அடுத்த MGR நீதான்; ஓட்டு கொட்டும்.. செருப்பா யூஸ் பண்ணுவாங்க - ரஜினியை புகழ்ந்த வீரப்பன்!

Rajinikanth Tamil Cinema Tamil nadu Tamil Actors Tamil Actress
By Jiyath Dec 17, 2023 03:30 PM GMT
Report

சந்தன கடத்தல் வீரப்பன் நடிகர் ரஜினி குறித்து பேசியுள்ளார்.

கூசு முனிசாமி வீரப்பன்

சந்தன கடத்தல் வீரப்பனே தனது வாழ்க்கை வரலாற்றை கூறும் "கூசு முனிசாமி வீரப்பன்" என்ற ஆவனத் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நக்கீரன் கோபால் வீரப்பனை சந்தித்து பேட்டி கண்ட வீடியோக்கள் அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த MGR நீதான்; ஓட்டு கொட்டும்.. செருப்பா யூஸ் பண்ணுவாங்க - ரஜினியை புகழ்ந்த வீரப்பன்! | Veerappan Has Spoken About Actor Rajinikanth

இதன் ஒரு எபிசோடில் வீரப்பன் தமிழக அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து பேசியிருப்பார். அப்போது அவர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியதாவது "எம்.ஜி.ஆர் மிகவும் கஷ்டப்பட்டவர். அவருக்கு எல்லாமே தெரியும். எம்.ஜி.ஆரைப்போல் ஒரு பிள்ளை பிறப்பது கஷ்டம். ஆனால் இந்த ரஜினிகாந்த் அப்படி அமைவார் என்று எனக்கு நன்றாக தெரியும். எல்லாரையும் மதிக்கக்கூடியவர் ரஜினி. என்னைப்போல் தெய்வ பக்தி உள்ளவர். அதனால் அவர் ஆட்சிக்கு வந்தால், அடுத்த எம்ஜிஆர் வந்துவிட்டார் என்று எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.

ஜிம்மில் அந்த நபர்; ஒன்றரை வருஷத்துல 10 தடவ மட்டும்தான்.. - ஓப்பனாக சொன்ன பிரியா பவானி!

ஜிம்மில் அந்த நபர்; ஒன்றரை வருஷத்துல 10 தடவ மட்டும்தான்.. - ஓப்பனாக சொன்ன பிரியா பவானி!

நடிகர் ரஜினிகாந்த்

மேலும் பேசிய வீரப்பன் "ஐயா ரஜினிகாந்த் அவர்களே! உங்களிடம் நான் பேசுகிறேன். நீங்கள் இறங்கி நின்றால், ஓட்டு கொட்டும்.. அது நிச்சயம். நீங்கள் முதலமைச்சராக வருவதை குறித்து கவலையே வேண்டாம்.

அடுத்த MGR நீதான்; ஓட்டு கொட்டும்.. செருப்பா யூஸ் பண்ணுவாங்க - ரஜினியை புகழ்ந்த வீரப்பன்! | Veerappan Has Spoken About Actor Rajinikanth

நீங்கள் யாருடனும் சேரவேண்டாம், யாரையும் ஆதரிக்க வேண்டாம். நீங்களாக ஒரு கட்சியைத் தொடங்கி தனியாக நின்று அமைச்சராக வாருங்கள். அப்படி என்றால் மட்டும் அதைச் செய்யுங்கள். இல்லையென்றால் ஒதுங்கி நில்லுங்கள். அடுத்தவர்களுக்கு கொடை பிடிக்காதீர்கள். உங்கள் பெயர் கெட்டுப்போய் விடும். உங்களை பகடைக்காயாக பயன்படுத்தி அமுக்க வேண்டும் என்று நிறைய முதலைகள் காத்திருக்கிறார்கள். காலுக்கு போடும் செருப்பாக உன்னை பயன்படுத்தி செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றதும் உன்னை கழட்டி விட்டுவிடுவார்கள்.

உங்கள் பெயரை பயன்படுத்தி ஒட்டு வாங்கிவிட்டு ஆட்சிக்கு போகலாம் என்றும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நீங்கள் அடிமையாகிவிடப் போகிறீர்கள். ஒருத்தருக்கும் நீங்கள் அடிமையாக வேண்டாம். உங்களை நேரில் சந்தித்து இதையெல்லாம் சொல்ல வேண்டு என்று ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு கடவுள் எனக்கு வாய்ப்பு கொடுத்து வைக்கவில்லை" என்றார்.

சூப்பர் ஸ்டார் வேஸ்ட்; யாருக்கும் ஒரு பயனும் இல்ல - கிழித்து தொங்கவிட்ட பூ பட நடிகை!

சூப்பர் ஸ்டார் வேஸ்ட்; யாருக்கும் ஒரு பயனும் இல்ல - கிழித்து தொங்கவிட்ட பூ பட நடிகை!