அது கம்மியா இருந்ததால ஸ்கூல்ல.. இப்போ கொஞ்சம் வளந்துருக்கு - நடிகை இவானா ஓபன் டாக்!
உடல் கேலியால் தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து நடிகை இவானா பேசியுள்ளார்.
நடிகை இவானா
இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான 'நாச்சியார்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை இவானா. அந்த படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த 'லவ் டுடே' என்ற படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும், தோனி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் வெளிவந்த LGM என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார்.
தற்போது இவரது நடிப்பில் மதிமாறன் என்ற படம் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இவானா, உடல் கேலியால் தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது "உயரம் கம்மியா இருக்கனால நிறைய பட வாய்ப்புகள் எனக்கு மிஸ் ஆகியிருக்கு. சினிமாவை மட்டும் நான் சொல்லல.
உருக்கமான பேச்சு
ஸ்கூல் படிக்கும்போது கூட உயரம் கம்மினால செண்டர் பொசிஷன் எனக்கு குடுக்க மாட்டாங்க. எந்த இடத்துக்கு போனாலும் கம்பாரிசன் இருக்கும். நீ இந்த கிளாஸ்லயா படிக்கிற, உன்ன பார்த்தா அப்படி தெரியலயேனு சொல்லுவாங்க.
இந்த மாதிரி பிரச்னையை நான் நிறைய சந்திச்சிருக்கேன்" என்று இவனா உருக்கமாக பேசினார். மேலும் லவ் டுடே படத்தின் வெற்றி, வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து பேசிய இவானா "அந்த சக்ஸஸ் என்னை கொஞ்சம் பிசியா இருக்க வச்சது.
அதுமட்டும் இல்லாம, இவ்வளவு நாள் ஆடியன்ஸ் பாயின்ட் ஆஃப் விவ் தான் எனக்கு இருந்துச்சு. நானும் தியேட்டர் போவேன், படம் பாப்பேன் அப்படிதான் இருந்துச்சு. ஆனால் லவ் டுடேக்கு அப்பறம் ஒரு நடிகையா என்னோட மைண்ட் இன்னும் கொஞ்சம் வளந்துருக்கு" என்று இவனா பேசியுள்ளார்.