அந்த இடம் இப்படி பெரிதாக மாறக் காரணமே இந்த பிரச்சனை தான் - ரேஷ்மா வெளிப்படை பேட்டி!
நடிகை தனது உடல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ரேஷ்மா பசுபுலேட்டி
தமிழ் சினிமாவில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தமிழில் விஷ்னு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டார், அதில் போல்ட் லேடியாக வலம் வந்தார். தற்பொழுது விஜய் டிவியில் பிரபலமான பாக்கியலட்சுமி என்ற சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "என்னுடைய மார்பகம் பெரிதானத்தை பற்றி பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இது இயற்கையாக நடந்தது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சிகள் பங்கு பெற்ற போது சரியான உணவு கிடைக்காததால் உடல் எடை குறைந்து விட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு நிறைய சாப்பிட்டேன்.

நான் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசனில் இருந்த போட்டியாளர்கள் பலரும் உடல் எடை குறைந்து தான் வெளியே வந்தார்கள். நான் வெளியே வந்தபிறகு எனக்கு ஹைபோ தைராய்டிசம் வந்தது, அதனால் தான் நான் அதிகம் வெயிட் போட்டேன். அதனால்தான் என்னுடைய மார்பகம் பெரிதானது.
இதை தவிர இதற்காக எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை" என்று கூறியுள்ளார்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    